தமிழ் ட்விட்டர்கள்

தமிழ் குருவிகளுக்கான கூடு

Menu

Skip to content
  • முகப்பு
  • குருவிகள்
    • கீச்சர் பரிந்துரை
    • கீச்சர் சந்திப்பு
    • பங்களித்தவர்கள்
  • படைப்புகள்
    • வலைபாயுதே
    • ட்விட்டர் பட்டிகள்
    • கீச்சர் விருப்பம்
    • கீச்சர் பக்கங்கள்
  • நம்மைப் பற்றி..
  • தொடர்பு கொள்ள
Follow @TwiTamils

Tag Archives: மொபைலில் தமிழில் தட்டச்ச

அலைபேசியிலும் தமிழில் எழுதலாம்!

September 15, 2011 by meerantj

2

If you cant read tamil unicode fonts in your mobile.. Please install opera mini in your mobile, then do this small configuration fix. In your opera mini address bar, type.. config: ..then configuration page will open, at the bottom of the page “use bitmap images for complex scripts” select “yes” then “save & exit”. Now you can view tamil unicode pages in your mobile. Bolt mobile browser Indic version supports Tamil Unicode. To Enable Tamil in bolt browser check out here. After You fixed your Mobile browser, refresh this page!

என்ன, இப்போது தங்கள் அலைபேசியில் தமிழ் படிக்க முடிகிறதா? முன்பு தமிழில் எழுதுவதற்கான வழிகள் அனைத்தையும் தொகுத்து எழுதி இருந்தோம். அதில் ஒவ்வொன்றைக் குறித்தும் விரிவாக எழுத உள்ளோம். இந்த பதிவில் அலைபேசிக்கான இணைய தமிழ் எழுதிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Tamil Tweet : தமிழ் உள்ளிடப் பெறாத அலைபேசிகளில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவற்றைக் களையும் வகையில் தமிழில் ட்வீட் எழுதுவதற்கு என்றே தோழர் @tamil கிருபா சங்கர் சிறப்பான எழுதியாக இதை வடிவமைத்துள்ளார். இதனைப் பயன்படுத்தும் முன் தமிழ் எழுத்துக்களுக்கான விசைகளை அறிந்து கொள்வது அவசியம்.

அ=a ஆ=aa இ=i ஈ=ii உ=u ஊ=uu எ=e ஏ=ee ஐ=ai ஒ=o ஓ=oo ஔ=au ஃ=q

க்=k ங்=ng ச்=ch/s ஞ்=nj ட்=t ண்=N த்=th ந்=w/-n ப்=p ம்=m ய்=y ர்=r ல்=l வ்=v ழ்=z ள்=L ற்=R ன்=n

ஸ்=S ஜ்=j ஷ்=sh

உயிர் மற்றும் மெய் எழுத்துகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. உயிர் மெய் எழுத்துகளின் சேர்க்கை நீங்கள் அறிந்ததே. உதாரணமாக ம்=m + ஆ=aa -> மா=maa என எழுத வேண்டும். ஆங்கில எழுத்துக்களை அப்படியே பிரதியிட கூறியுள்ளபடி அச்சொல்லின் முன் .. ஒற்றுகள் இடவும் Example: ..English.. இந்த எழுதியை Opera Mini ல் திறந்து கொள்க. பின் தங்களுக்கு தேவையானதை தட்டச்சுக. இப்போது Text Box ன் கீழ் இருக்கும் Select Box ல் Preview , No preview என்று இரண்டு வாய்ப்புகள் இருக்கும் Preview என்பதை தேர்ந்தெடுத்து Transliterate பொத்தானை அழுத்துக. ஒபேரவில் தமிழ் வாசிக்க இயலும் என்பதால் நீங்கள் எழுதியதை வாசித்து சரி பார்த்துக் கொள்ளலாம். அத்தோடு மேல Text Box ல் நீங்கள் தட்டச்சியதும், இன்னொரு Text Box ல் தமிழ் ஒருங்குறியாக மாற்றப்பட்டதும் இருக்கும். ஒருங்குறியாக மாற்றப்பட்டதை எங்கு வேண்டுமோ அங்கு Copy/Paste செய்து கொள்ளலாம். உதாரணமாக தமிழ் sms அனுப்ப பயன்படுத்தலாம். இந்த எழுதி உடன் Tweet பொத்தானும் இணைக்கப் பட்டுள்ளதால் இதிலிருந்தே தாங்கள் ட்வீட் செய்து விடலாம். Signin With Twitter என கேட்கும், அங்கே உங்களை Oauthorize செய்து கொண்டால் போதுமானது. இத்தனையும் ஒருங்கே அமைந்த இது சிறப்பான எழுதி தான் இல்லையா? இந்த எழுதியை நம் ட்விட்டர் பக்கத்தின் Update Box க்கு பதிலாக அந்த இடத்தில் இணைத்து விட்டால் எப்படி இருக்கும்? நாம் த்வீட்களை வாசித்துக் கொண்டே தமிழில் த்வீட்டும் எழுத முடியும் தானே!! அதைத் தான் நம் தோழர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். “Twitter Client + தமிழ் எழுதி” இனி தமிழ் ட்வீட் எழுத தனியாக ஒரு எழுதியோ, வேறு எந்த Twitter Clientமோ தேவைப்படாது.. தோழரின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துங்கள்.

யந்திரம் : இது அலைபேசிக்கென வடிவமைக்கப் பட்ட எழுதி! ஒபேரா மினியை விட UCweb உலவியில் சிறப்பாக செயல்படும். இதில் இரண்டு Text Box கள் கொடுக்கப் பட்டுள்ளன. ஒன்று நீங்கள் தட்டச்சுவதற்க்கும், மற்றொன்று ஒருங்குறியில் மாற்றப்பட்ட எழுத்துகளை பிரதி எடுக்கவும். preview, tweet போன்றவை இல்லை.

ஈகரை : இதுவும் யந்திரம் போன்றதே! இது போன்ற அல்லது அலைபேசிக்கான தமிழ் எழுதி செயலிகளில் தட்டச்சியதை preview பார்க்கும் வசதி இருப்பதில்லை, இருந்தாலும் அது அலைபேசியில் தமிழ் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும். தமிழ் ஆதரவு இருக்கும் அலைபேசிகளில் தனி எழுதிகள் தேவையே இல்லையே. இது போன்ற சிக்கல்களில் எந்த எழுதி மூலமாகவும் தமிழ் ஒருங்குறியில் மாற்றப்பட்ட செய்தியை Copy செய்து TamilTweet மூலம் ஒபேரா மினியில் Preview பார்த்துக் கொள்ளலாம். மேலும் TamilTweet குறித்த ஐயங்கள், கருத்துக்கள் இருப்பின் அவர் வழங்கியுள்ள மின்னஞ்சலுக்கோ அல்லது ட்விட்டரில் @tamil எனவோ அவரை தொடர்பு கொண்டு கேட்கலாம். இந்த காரணங்களால் மற்ற இரு எழுதிகளை விட TamilTweet தனை அதிகம் பரிந்துரை செய்கிறேன்.
ஈகரை மற்றும் யந்திரம் எழுதிகளுக்கான விசைகள்:

அ=a ஆ=aa இ=i ஈ=I/ii உ=u ஊ=U/uu எ=e ஏ=ee ஐ=ai ஒ=o ஓ=O ஔ=OLa/au ஃ=q

க்=k/g ங்=ng ஞ்=snj/nj ண்=tN/N த்=th/dh ந்=w ப்=b/p ம்=m ய்=y ர்=r ல்=l வ்v ழ்=z/zh ள்=L ‌‍ற்=R ன்=n

ஜ்=j ஷ்=sh ஸ்=S ஹ்=h ஸ்ரீ=sri

இரண்டு நாள் எழுதிப் பழகினால் புரிந்து விடும். தங்களின் மேலான ஆலோசனைகளை பின்னூட்டமாக இடவும்!

இந்த செயலி தற்காலிகமாக இங்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு : @SeSenthilkumar

இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்தி தங்களின் நண்பர்கள் அலைபேசியின் வழியே எளிதாக தமிழ் எழுத உதவுங்கள்!

Tweet

Posted in Tips, Twitter, குறிப்புகள், ட்விட்டர், தமிழில் ட்விட்டர். Tagged mobile tamil, tamil mobile, tamil twitter, type tamil in mobile, அலைபேசியில் தமிழ், மொபைலில் தமிழில் தட்டச்ச.

Post navigation

தமிழ் வளர்க்கும் தமிழம்.நெட்

தமிழ் புத்தகங்கள், சிற்றிதழ்கள், செய்திகள், தமிழ் சான்றோர்கள் இன்னும் எண்ணற்ற தகவல்கள் இங்கே சேர்த்து (குவித்து) வைக்கப்பட்டுள்ளது! தமிழ் ஆர்வலர்கள் காலமெல்லாம் வாசித்தாலும் தீராது இந்தக் களஞ்சியம்!

தூய தமிழ் பழகுவோம்

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து அதற்க்கு மாற்றான தூய தமிழ் சொற்களை அறிந்திட உதவும் தளம் - புல்வெளி - தூய தமிழ் பேச எழுத விழைவோர் பயனடைக

பார்வையாளர்கள்

  • 75145Total reads:
  • 19Reads today:
  • 47313Total visitors:
  • 19Visitors today:
  • 0Visitors currently online:

அதிகம் படிக்கப்பட்ட பதிவுகள்

  • மார்ச் 1, 2012 வலைபாயுதே
  • பிப் 23, 2012 வலைபாயுதே
  • மங்கையர்க்கரசி @SandhyaCharu
  • தமிழ் கீச்சர்கள் சந்திப்பு 2012
  • ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்

Categories

#TNfollow Tips Tools Twitter twitters page twitter tags கருவிகள் கீச்சர் சந்திப்பு கீச்சர் பரிந்துரை கீச்சர் விருப்பம் குறிப்புகள் ட்விட்டர் ட்விட்டர் பக்கங்கள் ட்விட்டர் பட்டிகள் தமிழில் ட்விட்டர் புதிய வசதிகள் வலைபாயுதே
Proudly powered by WordPress | Site Developed by Iniyan - Proffesional WordPress Services.