டிவிட்டர் பெயர் : @Karna_Sakthi
பெயர் : ச.கருணாநிதி
இடம் : கோவை
சுய குறிப்பு : மருந்து விற்பனைப் பிரதிநிதி. இரண்டே வயதான அழகிய பெண் குழந்தையின் தந்தை!
கீச்சுகள் சில,
உலகில் கடவுள் இருக்கிறாறோ இல்லையோ தெரியவில்லை குழந்தைகள் இருக்கிறார்கள் போதாதா?
— கர்ணா – (@karna_sakthi) October 22, 2011
நிலைகண்ணாடியானாலும் நாம் தினமும் பார்ப்பது நிலையற்ற முகங்களைதான்…
— கர்ணா – (@karna_sakthi) October 22, 2011
இறைந்து கிடந்த நட்ச்சத்திரங்களை காணோம் எனக்கேட்ட மகளிடம் சூரியன் கொத்தி தின்றுவிட்டதென்றேன் அப்போ இரவில் சூரியனை தின்பது யாரென கேட்கிறாள்
— கர்ணா – (@karna_sakthi) October 1, 2011
நாகரிகம் நதிக்கரையில் பிறந்தது,,,நாவின் கரைகளில் இறந்தது,,,
— கர்ணா – (@karna_sakthi) October 29, 2011
மருத்துவரின் மகன் மருத்துவம் படிப்பது ஒரு நிகழ்வு;மாநகராட்சி உழியனின் மகன் மருத்துவம் படிப்பது ஒரு சமுதாயத்திற்கு விடிவு…#இடஒதுக்கீடு
— கர்ணா – (@karna_sakthi) September 15, 2011
மழலையில் ஏழுகடல் ஏழுமலை தான்டி நாம் பார்க்கவிரும்பிய ஒரூயிர் இன்றும் அங்கேதான் இருக்கிறது பெரியவர்களானதும் நாம்நிராகரித்த வலிகளோடு…
— கர்ணா – (@karna_sakthi) September 23, 2011
எதுவும் நிரந்தரமில்லைதான் ஆனால்நிச்சயமற்றது என எதுவும் இல்லை…
— கர்ணா – (@karna_sakthi) October 24, 2011
நெஞ்சுரத்தையும் சேர்த்து நிமிர்த்து பிடித்தால்நம் தீக்குச்சிகளும் தீப்பந்தங்களே…
— கர்ணா – (@karna_sakthi) October 31, 2011
கவிதை ,கருத்து கீச்சுகளை சட்டை செய்யாவிடினும் கண்ணீர் கிச்சுகளை சிறு சலனமேனும் செய்யுங்கள் அது துடைக்கும் வழியறியாது இங்கு வந்தவை..
— கர்ணா – (@karna_sakthi) October 31, 2011
மழை வீடு உள்ளவர்க்கு கவிதைகளையும்இல்லாதவர்க்கு உறக்கமற்றவேதனைகளையும் ஒரு சேர தருகிறது ….
— கர்ணா – (@karna_sakthi) October 12, 2011
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் எனில்திருப்பதி உண்டியலில் எதை காண்கிறார்கள்?
— கர்ணா – (@karna_sakthi) October 12, 2011
எல்லோரிடமும் சொந்தவீட்டிற்கு வைக்க ஒரு பெயர் இருக்கிறது.. சொந்தமாக வீடுதான் இல்லை…
— கர்ணா – (@karna_sakthi) October 6, 2011
வலியின்வாதங்களை யார் பேசினாலும் வலிகள் வலிப்பவனுக்கு மட்டும்தான் …
— கர்ணா – (@karna_sakthi) September 13, 2011
பரிந்துரை : @vedhaLam
நண்பர்களுக்கு இவரைப் பின்பற்ற பரிந்துரைக்க கீழுள்ள Tweet பொத்தானை அழுத்தவும்!