தமிழ் கீச்சர்கள் சந்திப்பு 2012

அன்பார்ந்த தமிழ் கீச்சர்களே,
2006 ட்விட்டர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழ் கீச்சர்கள் பயன்படுத்த துவங்கி விட்டார்கள். 2012 ல் தற்போது 8000 தமிழ் கீச்சர்கள் இருப்பார்கள் என கணிக்கிறேன். மற்ற சமூக ஊடகங்களை விட இங்கே நாம் அதிகம் கதைக்கிறோம். பல்வேறு இடங்களில் சிறு சிறு சந்திப்புகளில் கலந்து கொண்டிருப்போம். சென்ற 2011 ஆண்டு இலங்கை தமிழ் கீச்சர்கள் நாடு தழுவிய அளவில் அனைவரும் ஒரு நாளில் ஓரிடத்தில் சந்தித்து அளாவினார்கள். வருடந்தோறும் நாமும் ஒரு நாள் கூடி சந்தித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினோம். அதன்படி வருடந்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிறு கூடலாம் என ஆலோசித்துள்ளோம்.

தமிழ் ட்விட்டர் வழி நண்பர்களானோர் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதாலே இந்த சந்திப்பை இரு மாதங்கள் முன்பாகவே அறிவிப்பு செய்தோம். chennaitweetup @ gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் ட்விட்டர் பெயர் , எங்கிருந்து வருகிறீர்கள் மற்றும் உங்கள் கருத்துகளையும் தெரிவிக்க கோரியிருந்தோம். சந்திப்பானது May 13, 2012. 3pm அளவில் அடையாறு பேருந்து முனையம் அருகே உள்ள இந்திரா நகர் இளையோர் விடுதியில் நடைபெற்றது.

அரங்கத்திறகான செலவுகளை மூத்த கீச்சர் @ravan181 ஏற்றுக் கொண்டார். அரங்க அமைப்புகள், உணவு ஏற்பாடுகளை சென்னைவாசியான @senthilchn கவனித்துக் கொண்டார். அழைப்புகள், பணம், மற்றவற்றை நிர்வகிப்பதை @expertsathya ஏற்றுக் கொண்டார். ஊடகங்களை வரவைப்பதை @balu_sv கவனித்துக் கொண்டார்.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதற்கான செலவை எப்படி சமாளிப்பது என திணறி இருந்தோம். இது அனைத்து தமிழ் கீச்சர்களின் சந்திப்பு ஆதலால், விரும்பியோர் பங்களிக்கலாம் ஆனால் கட்டாயமில்லை என்றோம். மக்கள் மனமுவந்து வாரி வழங்கி விட்டார்கள். வரவு செலவு விவரம் இங்கே. என்னவென்று இதை எழுதுவது. உண்மையில் திகைத்து நின்றோம். அனைவரின் பங்களிப்பு இல்லையேல் நிச்சயம் சிரமப்பட்டிருப்போம். இதுதான்யா குழு முயற்சி. அசத்திப்புட்டோம் மக்களே. அனைவருக்கும் நன்றி!

நிகழ்வுகள் :

நாம் சந்தித்து கலந்துரையாடுவது தான் ஏற்பாட்டின் முக்கிய நிகழ்வு, நோக்கமும் கூட. நுழைவாயிலில், வந்தவர்கள் யார் என பதிவு செய்து கொண்டோம். முதலில் வந்தவர்கள் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு இணைந்து படம் பிடித்துக் கொண்டார்கள்.

பெண் கீச்சர்கள் சார்பில் @amas32, @rajakumaari, @geethutwits, @realrenu ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனந்த விகடன், Zee Tamil, புதியதலைமுறை Tv – மூன்று ஊடகங்கள் கலந்து கொண்டன.

நிகழ்ச்சிகளை @iParisal தொகுத்து வழங்கினார். மே 13 அவரின் பிறந்த நாள் ஆதலால், அரங்கத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினோம். அவர் சார்பில் அனைவருக்கும் இனிப்பு, காரம், மென்பானம் வழங்கினார்.

நிகழ்ச்சி இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. காண்க. நன்றி @iamkarki @AIDselva. அரங்கத்தில் காணொளிகளை திரையிட ஒளி அமைப்புகள் செய்திருந்தோம்.

முதலில் அனைவரும் அவரவர் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டோம். ஓ! அவரா இவர் என பலரின் விழிகள் விரிந்ததை காண முடிந்தது! கரவொலி எழுப்பினர்.

நமது ‘தமிழ் கீச்சர்கள்’ தளத்தின் சார்பில் @selvu #selvueffect கீச்சுகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டோம். அவர் வழங்க, @ravan181, @amas32, @senthilchn பெற்றுக் கொண்டனர்.

@BalaramanL இன் ‘உடன்பிறப்புகளே’ குறும்படம் எடுக்கப்பட்ட விதம் திரையிடப்பட்டது. குறும்படம் எடுப்பதும் சுவையான நிகழ்வு தான்!

Eurekha Child Foundation சார்பில் @Aidselva குழந்தைகளின் எழுத்தறிவின் நிலை, பள்ளிகளில் பயிற்றுவிக்கும் திறன் குறைபாடுகள், அதற்கான தீர்வுகள் குறித்து பேசினார்.

@cablesankar , @sureka இருவரும் அவர்களின் ‘கேட்டால் கிடைக்கும்’ இயக்கத்தைப் பற்றி உரையாற்றினார்கள். சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டிய சமூக விழிப்புணர்வு குறித்த அவர்களின் அனுபவங்களைக் கேட்டபின், ஆகா எத்தனை முறை ஏமாளியாய் மீதி சில்லறை வாங்காமல் வந்திருக்கிறோம் என்று தோன்ற வைத்தது!

மஸ்கட்திலிருந்து வந்திருந்த @ravikumarMGR மற்றும் புதுவை சூரியன் பண்பலையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இருக்கும் @RJcrazyGopal இருவரும் ஏட்டிக்கு போட்டியாக பல குரலில் பேசி அசத்தினர். இவரிடம் நம் மருத்துவர் @DrTRM மாட்டிக் கொண்டார். உங்களுக்கும் அலைபேசியில் அழைத்து குரலை மாற்றிப் பேசி ஏமாற்றக் கூடும். உசாரா இருங்க! :)

@iamkarki யின் குறும்படம் பதிவு செய்த வட்டில் ஏற்பட்ட சிக்கலால் திரையிட முடியாமல் போனது! :(

@iKaruppiah மழையில் நனைதல் பற்றி கவிதை வாசித்தார்.

@rsgiri பின்புல இசையுடன், தன் குரல் சேர்த்து அருமையாக பாடினார். பின்னர் @pattaasu ஒரு மலையாள பாடல் பாடினார்.

@jesuthangadurai சில நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டார். அதன் பொருட்டு மனைவியிடம் மாத்து வாங்கியிருக்க மாட்டார் என நம்புகிறோம். நினைவுப் பரிசாக #TNmegaTweetUP என அச்சடிக்கப்பட்ட பேனாக்கள் வழங்கினார்.

நமது @TwiTamils ‘தமிழ் கீச்சர்கள்’ தளத்தின் வெளியீடாக புதிய கீச்சர்களுக்கான தமிழ் ட்விட்டர் கையேடு அறிமுகம் செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இணையம் பயன்படுத்த தெரிந்த யாவரும் ட்விட்டரை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அனைவரோடும் பகிர்ந்திட வேண்டுகிறோம்.

@smukam, @amas32, @senthilcp, @karaiyaan ட்விட்டர் குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வாழை அமைப்பின் சார்பில் @ajdhivya உரையாற்றினார். @vazhai அமைப்பில் மாணவர்கள், மென்பொருள் துறையில் பணியில் இருப்போர் பலர் சேர்ந்து குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். ஓய்வு நேரங்களில் கற்றுக் கொடுக்கவும் செய்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் இணைந்து பங்காற்றலாம். குறைந்தபட்சம் அவர்களிடம் ஒரு Tshirt வாங்குவதின் மூலம் 200ரூபாய் பங்களிக்க முடியும். நம் போன்ற சமூக அக்கறை கொண்ட இளையோர்களால் நடத்தப்படுவதால் கண்டிப்பாக செய்யலாம்.

அலைபேசியில் கீச்சுபவர்களுக்காக TamilTweet வடிவமைத்து தந்த @tamil கிருபா சங்கர் அவர்களை வாழ்த்தினோம்.

இறுதியாக இரவு உணவு செம்ம அருமை. திருப்தியாக சாப்பிட்டோம். 125 பேருக்கு சாப்பாடு சொல்லி இருந்தோம். 115 பேர் வந்திருந்தார்கள். அதில் 75 பேர் அளவில் மட்டுமே சாப்பிட்டுருப்பார்கள். மீதமான உணவுகளை ஆதரவற்றோர் விடுதிக்கு வழங்கி விட்டோம். உங்கள் பெயர் கூறி பலர் வயிறார உண்டிருப்பார்கள் என பெருமிதம் கொள்ளலாம்.

நமது முதல் வருடாந்திர சந்திப்பு இது. சிறப்பாக நடத்தி முடித்தோம் என்று மக்களின் வார்த்தைகளைக் கேட்ட பின்பே நிம்மதி அடைந்தோம். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்த ஊக்கமளித்துள்ளது. அடுத்த சந்திப்பு கோவையில் என முடிவு செய்துள்ளோம். கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வேண்டும். இப்போதிலிருந்தே அழைக்கத் துவங்கி விடலாம். செலவில் அனைத்து கீச்சர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக செய்ய இயலும் என்பது கண்கூடு!

கலந்து கொண்டவர்கள் : @expertsathya @karaiyaan @prasanna2903 @chinnapiyan @jesuthangadurai @rvelz @vilambaram @ravikumarmgr @senthilcp @imchennu @joseph_selva @sesenthilkumar @raz_funz @ravan181 @ajdhivya @twittdeepak @4ndzwellwisher @senthilnathansk @k7classic @santhozn @selvu @thiru7m @vedhalam @sabaapathy @vishamakaran @vattajileppi @iamsankar_ @aidselva @mcgrathbabu @jmr_chn @aruniac @thontil @smukam @balaramanL @navinmmr @nattu_g @gvbn_balaji @vigneshram @lucky_krishna @iparisal @pethusamy @venkat1india @vasanthen @kutty_twits @machakkaaran @jill_online @parthivellore @dheepakg @ganesh_ganith @g4gunaa @sundarkudos @kanithamethai @ikaruppiah @amas32 @Nchozhan @adhavanmurasu @bigilu @freeyavudu @athisha @srikudev @dhevadhai @sharankay @muthuggkumar @shubawrite @g_for_guru @rsGiri @Chpaiyan @rgokul @rajeshpadman @i_shankar @proxax @basithdboss @karthikram1 @rmanojas @naanraman @anbupaunambal @mylairajesh @sureka @cablesankar @iamkarki @kullabuji @ravi_2kpp @crazyganesh @kumaresan @4sn @akkaporu @anjasingam @discoverybookpalace @nrflyingtaurus @arunatma @iamsudhar @mokkaiwriter @thirutukumaran @_santhu @omakuchchi @kishoreinme @vbec24 @pattaasu @itsbritto @balu_sv @riyazdentist @apmahadev @jeevanlancer @rajakumaari @realrenu @geethutwits @iKrishh @kaveriganesh @tamil @geminisathya @monaprabhu @dkcbe @thiru_navu @sidhardh_ @Rjcrazygopal

படங்கள் : @AIDselva வின் Picasa Album ,

பதிவுகள் : @katturai.com தளத்தில் , @amas32 ன் posterous பக்கத்தில் , @rsgiri யின் பாடுகிறேன் வலைப்பூவில்

அடுத்த வருடம் கோவையில் சந்திப்போம் நண்பர்களே!

தொகுப்பு : @TNmegaTweetUp

கீழுள்ள Tweet! பொத்தானை அழுத்தி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க!


திருவாரூர் கீச்சர் சந்திப்பு

திருவாரூரில் நிகழ்ந்த கீச்சர் சந்திப்பின் புகைப்படங்கள்!

@prem_tvr2005 and @aarooraan

இடமிருந்து வலம் @aarooraan @prem_tvr2005

@aarooraan @veerabaaguu @Rajesh3G

இடமிருந்து வலம் @aarooraan @veerabaaguu @Rajesh3G

417110077


tiruvaarur tweetup1



தோழர் @chinnapiyan அவர்கள் எழுதிய வாழ்த்து மடல்,

cp1


cp2



நண்பர்களோடு பகிர்ந்திட கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்துக!




திருச்சி ட்விட்டர் சந்திப்பு

செப்டம்பர் 18, 2011 ஞாயிறன்று திருச்சி வாழ் தமிழ் கீச்சர் சந்திப்பு நிகழ்வின் புகைப்படங்கள்!

 

நண்பர்களுக்கு பகிர்ந்திட கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்தவும்!

சத்யா @expertsathya திருமணத்தில்

தோழர் @expertsathya தன் திருமண வரவேற்பிற்கு ட்விட்டர் வழியே அழைப்பிதழ் வைத்திருந்தார்!

@expertsathya : முகமறியா உங்களின் எல்லோரின் அறிமுகங்களையும், ஆசிகளையும் எதிபார்க்கிறேன். இந்த அழைப்பை பதிவுக் கூட்டத்திலோ அல்லது TweetUp சந்திப்பிலோ முறைப்படி கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் பதிவிட்டு உங்களை அழைக்க வேண்டிய சூழ்நிலை. இந்த அழைப்பை நேரில் வைத்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு தங்களின் வருகையையும், ஆசியையும் வேண்டுகிறேன். பயணம் குறித்த விபரங்களுக்கு எந்த நேரமும் என் 99447-23392 அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

செப்டம்பர் 18,2011 அன்று 11:30am – 2:30pm மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை SVT திருமண மண்டபத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் கீச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது!

@ExpertSathya Marriage

இடமிருந்து வலமாக @iamkarki , @iParisal , மணமக்கள் , @vedhaLam , @k7classic , @kullabuji

வாழ்க மணமக்கள் பல்லாண்டு!

திருநெல்வேலி தமிழ்கீச்சர்கள் சந்திப்பு

படங்கள் தொகுப்பு:@sparun (பதிவு)

இடம்: திருநெல்வேலி. இங்கு நடக்கும் முதல் ட்விட்டர் சந்திப்பு இது.

பங்குகொண்டோர்: @javeedibrahim , @DrTrm , @_lakhs family, @meenambas , @manish_193 and her father, @arunamigo , @DrKumar89 , @fuhrershiva and @sparun

நெல்லை ட்விட்டர் சந்திப்பு

நெல்லை ட்விட்டர் சந்திப்பு

கோவை தமிழ்கீச்சர்கள் சந்திப்பு : ஆகஸ்ட் 14, 2011

புகைப்படங்கள் : @vedhalam

கலந்துகொண்டோர்: @sss_cbe @minimeens @karna_sakthi @_Sanjai #selvam(?) @dkcbe @minimeens @say_satheesh @vedhalam @jeernalist @(jeernalist frnd) @(Dr Selvam)

கோவை ட்விட்டர் சந்திப்பு

@sss_cbe @minimeens @karna_sakthi @_Sanjai #selvam(?) @dkcbe

கோவை ட்விட்டர் சந்திப்பு

@jeernalist @dkcbe @_Sanjai @say_satheesh @(jeernalist frnd) @(Dr Selvam) @karna_sakthi

கோவை ட்விட்டர் சந்திப்பு

@dkcbe @_sanjai @minimeens @say_satheesh @karna_sakthi @vedhalam

(எல்லா படங்களிலும் பெயர்கள் இடமிருந்து வலம் வரிசையில் உள்ளன.)

ட்விட்டர் என்ற ஆலமரம்

(மதுரை ட்விட்டர் சந்திப்பில் @chinnapiyan அவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்த்துமடலின் எழுத்துவடிவம்.)

 

எத்தனை பறவைகள் உன்னிடம் தஞ்சம்
அத்தனைக்கும் அளிக்கிறாய் மஞ்சம்

இலக்கியம் பேசும் பறவைகள் என்ன
கவிதைகள் பாடும் பறவைகள் என்ன

உள்நாட்டு பறவைகள் என்ன வெளிநாட்டு பறவைகள் என்ன
பல்நோக்குடன் வரும் பல் டாக்டர் பறவை என்ன

உற்றவர்க்கு உள்ளன்போடு உதவிடும் பறவைகள் என்ன
மற்றவர்க்கு அறுவையானாலும் வந்து போகும் பறவைகள் என்ன

அப்பப்பா எண்ணிலடங்கா பறவைகளின் ரகம்
எப்பவுமே கேட்டு கொண்டிருக்குமே ஆனந்த ராகம்

சிறு கதைகளாகட்டும் சிங்கார கருத்துக்களாகட்டும்
அறுசுவையுடன் பரிமாறபடுகிறது உன்னிடத்திலே

கோபதாபங்களை கொட்டும் பறவைகள் எத்தனை
உள்ள குமுறல்களை கொட்டி தீர்ப்பவைகள் எத்தனை

சமுதாயத்தின் கொடுமைகளை சாடும் பறவைகளுக்கு
அமுதமாய் தீர்பளிக்கிறாய் உண்மூலம் மக்களுக்கு

நகைச்சுவை கேலி கிண்டல் நையாண்டி என
வகை வகையாக சிரிக்க முடிகிறது உன்னிடம்

துக்கம் சோகம் என்று அழமுடிகிறது உன்னிடத்தில்
தூக்கம் மறந்து ஆறுதல் அளிக்கிறாய் என்னிடத்தில்

ஒரு கிளையில் காதல் கொஞ்சும் பறவைகள்
மறு கிளையில் காதலுக்கு ஏங்கும் பறவைகள்

இங்ஙணம் வித விதமான பறவைகள் இருந்தாலும்
அங்ஙனமே சகித்து கொள்கிறாய் அனைத்தையும்

ஆபத்து என்றால் அரசாங்கத்தை விட முந்துகிறாய் நீ
விபத்து என்றால் துடித்தும் போகிறாய் நீ

அறுவை சிகிச்சைக்கு உயிர் காக்க உடனடி இரத்தம்
மறுசொல் இல்லாமல் உதவும் உன்னிடம் என்றும் இல்லை வருத்தம்

காக்கும் கடவுளுக்கு உண்டு ஓர் தலவிருச்சம்
எக்காலத்திலும் நீயே எங்களுக்கு அபயமளிக்கும் மாவிருச்சம்

குண்டுசியிலிருந்து கோபுர கலசம்வரை கிடைப்பது எங்கே
குறைவில்லாமல் கூறப்படுகிறது உன் மரக்கிளைகளில் இங்கே

பிரியாணி முதல் பீசா வரை இங்கே ஒரு பாசம்
பிரியமுடனே கூப்பிட்டு அழைக்கும் நேசம்

சமயத்தில் சிறுசு பெருசு என்றில்லாமல் ஒரு நக்கல்
சமய பேதமில்லாமல் நடந்திடுமே ஒரு கலக்கல்

அன்றாடம் எதிர்படும் பிரச்சனைகளின் தீர்வுக்கு
மன்றாடும் மாமன்றம் உன் மரநிழல்

பகைவர்களையும் நேசிக்க வைக்க முடிகிறது உன்னால்
அனைவரையும் அணைத்து கொள்ள முடிகிறது உன்னால்

உன் கிளைகளில் முட்டை இட இயலாதது
பெண் பறவைகள் வரத்து குறைவானது

இந்த கூடல் மாநகரில் கூடி இருக்கும் பறவைகளுக்கு
அந்த எல்லாம் வல்ல இறைவன் வாரி வழங்குவான் அருளை

தனக்கு என்றில்லாமல் இந்த உலகுக்கே நீ சொந்தம்
உனக்கு வித்திட்டவரை வணங்குகிறோம்

சின்னபையன்

மதுரை ட்விட்டர் சந்திப்பு : ஆகஸ்ட் 14, 2011

புகைப்படங்கள் : @riyazdentist

இச்சந்திப்பில் கலந்து கொண்ட ட்வீட்டர்கள் @BalaramanL @balatwits @riyazdentist @pachapullai @kombaipandiyaa @chinnapiyan @udanpirape @muralikannan @rajeshjothi

(யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால், மன்னிக்க. பெயரைப் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள் சேர்த்துவிடலாம்)

வாழ்த்துமடல் உருவாக்கியவர்: @chinnapiyan

 

madurai tweet up

madurai tweet up