பெயர் : சோனியா அருண்குமார்
இடம் : சென்னையிலிருந்து..
சுயவிவரம் : தெலுங்கராய் பிறந்து தமிழச்சியாய் வாழும், தமிழை நேசிக்கும், தமிழ்நாட்டு மருமகள்! செல்வன்.அருந்தமிழின் அன்னை. குடும்பத் தலைவி. ஆசிரியப் பயிற்சி பட்டதாரி! நாத்திகவாதி!
கீச்சுகள் சில :
அன்பு வைத்த பின் ஆழம் பார்ப்பது தற்கொலைக்கு சமம்
— The Princess (@rajakumaari) October 2, 2011
பொறாமை ஆற்றாமையில் முடிகிறது…
— The Princess (@rajakumaari) October 5, 2011
பெறுபவரும் கொடுப்பவரும் பெரியமனிதர்கள் ஆகிறார்கள் பாராட்டுதல் மூலம்
— The Princess (@rajakumaari) October 4, 2011
சிறு சிறு வெளிபாடுகளாலேயே பெரிய பெரிய விஷயங்களை உணர்த்த முடிகிறது
— The Princess (@rajakumaari) October 3, 2011
பெண்களின் அதிகபட்சமான தியாகம் சுயமரியாதையையும் விட்டு கொடுத்தாலே…………..
— The Princess (@rajakumaari) October 5, 2011
கல்லை வடித்து சிற்பம் ஆக்கி அதற்கு உயிரும் கொடுத்து பேரும் வைத்து பயப்படவும் முடிகிறது மனிதனால் மட்டுமே………..
— The Princess (@rajakumaari) October 5, 2011
இந்த ஊஞ்சல்ல என்ன தான் இருக்கு வயசு வித்யாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்கிறது #தொட்டில் பழக்கம்
— The Princess (@rajakumaari) October 6, 2011
ஆண் பெண் நட்பை நட்பு என்கிற கோணத்தை தவிர மற்ற எல்லாமுமாக அலசி ஆராய்கிறது சமுதாயம் !!
— The Princess (@rajakumaari) September 16, 2011
குறை இருப்பதை அறியாமல் நிறைக்கவே முடியாது # சுய மதிப்பீடு
— The Princess (@rajakumaari) September 15, 2011
வந்த வரைக்கும் லாபம்# அரசு நல திட்டங்கள்
— The Princess (@rajakumaari) September 15, 2011
என்ன மாயமோ இது மட்டும் ஒன்றில் இருந்து மற்றொன்று ஆரம்பம் ஆகிறது # புன்னகை # தொடர் சங்கிலி
— The Princess (@rajakumaari) September 13, 2011
எந்த ஒரு கனமான பொருளும் மண்ணை தொட்டே ஆக வேண்டும் புவி ஈர்ப்பால் # தலைக்கனமும் ஆணவமும் ஒருநாள் மண்ணை தொட வேண்டி இருக்கும் # நியதி
— The Princess (@rajakumaari) September 14, 2011
நமக்கு புடிச்ச மாதிரியே எல்லாரும் இருக்கனும்னா நாமலே எல்லாராவும் இருந்தா மட்டுமே முடியும்!!
— The Princess (@rajakumaari) September 12, 2011
எல்லாத்துக்கும் விமர்சனம் பண்ணிட்டே இருந்தா வாழ்க்கைல ரசிகனா இருக்க வாய்ப்பே இல்லாம போயிரும் !!!
— The Princess (@rajakumaari) September 12, 2011
பணத்த தண்ணியா செலவழிக்கிரானு சொன்னது போய்;தண்ணிக்காக பணத்த செலவழிக்கிறோம்;எதிர்காலத்துல பணம் மாதிரி தண்ணிய செலவு பண்றாணு சொல்லுவாங்களோ?
— The Princess (@rajakumaari) September 12, 2011
யாரவது ரொம்ப தொல்லை கொடுத்தா உடனே கடன் கேட்ரனும் போல # சமாளிக்க முடியாத தொல்லை கேசூஸ்
— The Princess (@rajakumaari) September 12, 2011
நான் நானாய் இருக்கும் தகுதியையும் இழக்கிறேன் பெண்ணாய் பிறந்ததினால் !!!
— The Princess (@rajakumaari) September 9, 2011
உலக மகா துரதிர்ஷ்ட்டசாலிகள் #தன்னுடைய அம்மா கையால் சாப்பிட முடியாதவர்கள்…
— The Princess (@rajakumaari) September 6, 2011
பரிந்துரை: @thamiziniyan
பின்பற்றுக!
இவரை பின்பற்றக் கோரி நண்பர்களுக்குப் பரிந்துரைக்க, கீழே உள்ள Tweet! பொத்தானை சுண்டுக!