ஆகஸ்ட் 25 2011 அன்று விகடனில் வலைபாயுதே பகுதியில் வெளியான நம் தமிழ் கீச்சர்களின் த்வீட்களின் தொகுப்பு இங்கே.
மருத்துவமனைக்காக தனது கோபாலபுரம் வீட்டை தந்தது மட்டுமல்லாது பல ஆயிரம் கோடியில் புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்த கலைஞரின் கருணையே கருணை
— திரு (@thirumarant) August 19, 2011
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்
— திரு (@thirumarant) August 20, 2011
நல்லவேளை சுதந்திர போராட்டத்தின் போது தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லை..இல்லனா அதையும் நாறடிச்சிருப்பாங்க
— திரு (@thirumarant) August 16, 2011
பல முறை பல்பு வாங்கி தான் நிஜ பல்பை கண்டுபிடித்தார் எடிசன்
— Neechalkaran (@Neechalkaran) August 15, 2011
https://twitter.com/#!/iamkarki/status/104122817250983937
ஐஸ்வர்யாராய் க்கு பிரசவம் போல மற்றொரு முக்கிய நிகழ்வு ஏதேனும் நடந்தால் ,வட இந்திய ஊடகங்கள் அன்னா வை அம்போவென கைவிட வாய்ப்புண்டு!
— கிருஷ்குமார் (@iKrishS) August 18, 2011
அது என்னவோ ‘உதவி தேவை’ என்றால் பலருக்கு ‘உபதேசம் தேவை’ என்று காதில் விழும் போல.
— Naveen Kumar (@navi_n) August 19, 2011
ரொமான்டிக் லுக்விட்டால் தரைபார்த்து குறுஞ்சிரிப்பு சிரிப்பவள் காதலி… “இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல” என்று பல்பு கொடுப்பவள் மனைவி…
— காட்டுவாசி (@kaattuvaasi) August 19, 2011
எனக்கு ஏனோ மன்மோகன் சிங்கை பார்க்கும்போதெல்லாம் இம்சை அரசனின் ஞாபகமே வருகிறது# என்ன எனக்கெதிராக புரட்சிப்படையா..??
— பார்த்திபன்(@parthi_fun) August 20, 2011
இப்போதும் நம்மை வெள்ளையர்கள்தான் ஆள்கிறார்கள். அன்றைக்கு நாட்டை… இன்றைக்கு நாக்கை
— வெற்றி நமதே(@rmanojas) August 17, 2011
ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை ! கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !
— கனியன் (@Kaniyen) August 19, 2011
கட்சி வற்புறுத்தலால்தான் அன்புமணி அமைச்சரானார்-அய்யா! # சொல்லிட்டு அங்கனயே உக்காந்து சிரிப்பீங்களா?இல்ல வீட்டுக்கு போயா??
— வேடன் (@Vaetan) August 18, 2011
”நீயில்லாமல் உயிர்வாழ முடியாது” என்பதை ஆண்கள் குழப்பத்திலும், பெண்கள் குழப்புவதற்கும் பயன்படுத்துகிறார்கள்
— அரசு(@arasu1691) August 19, 2011
இலங்கையும் கிரிகெட்டில் தொடர் தோல்வி #இந்தியா-சார் நானாவது ஹெட்லைட் இல்லாம வர்ரேன் ,பின்னாடி ஒருத்தன் சைக்கிளே இல்லாம வற்றான்
— சைக்கிள்காரன் (@CycleKaaran) August 21, 2011
“கைகளை நீட்டாதீர்” பேருந்தில் மட்டும் இருக்கவேண்டிய அறிவிப்பு அல்ல ! அரசு அலுவலகங்களிளும்தான் !
— கனியன் (@Kaniyen) August 18, 2011
image links
http://t.co/LQwMTPR
http://t.co/qJw394q
தொகுப்பு @vedhalam
வலைபாயுதே கீச்சுகளை நண்பர்களுடன் பகிர்ந்திட கீழே உள்ள Tweet Button ஐ சொடுக்கவும்!